உலகின் பல்வேறு பகுதிகளில் பொம்மலாட்டம் இருந்தாலும், முள் முருங்கை மரத்தால் ஆன அழகான பொம்மைகளுக்கு நூலைக்கட்டி ஆட்டுவிக்கும் பொம்மலாட்ட முறை இலங்கையில் பழங்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. இதனால் யுனெஸ்கோ நிறுவனம் 2018ம் ஆண்டு இலங்கையின் நூல் பொம்மலாட்டத்தை உலக பாரம்பரியமாக பெயரிட் டது. பொம்மலாட்டத்தின் முன்மாதிரியான வரலாறு 1922 ஆம் ஆண்டி லிருந்து தொடங்குகிறது. பொம்மலாட்ட வித்துவான் பொடிசிரினா அவர்கள் வேல்ஸ் இளவரசருக்கு முதல் பொம்மலாட்டத்தை காண்பித்து அவரிடமிருந்து பல பரிசுகளையும் பெற்றார். அம்பலாங்கொடை பொம்ம லாட்டத்திற்கு பெயர் பெற்றாலும் இலங்கையில் உள்ள எல்லா பொம்ம லாட்டங்களும் பலப்பிட்டியிலே காணப்படுகின்றன. நாட்டின் முதல் மற்றும் ஒரே அருங்காட்சியகமான பலபிட்டிய வலகெதர, கடந்த காலத்திலிருந்து இன்றுவரை அனைத்து பொம்மலாட்ட கலைஞர்களை யும் நினைவுகூரும் வகையில் தற்போதுள்ள அனைத்து பொம்மலாட்ட கலைஞர்களின் ஒத்துழைப்புடன் பொது மக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் புதைந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.