கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னர், ரத்தல்கொட, அம்பலன் வத்தை எனும் கிராமத்தில், உண்டிய ராலா என்பவர் மல்லு எனும் பெண்மணியின் கைப்பக்குவத்தில் செய்த பலகாரத்தை உண்டு அதன் சுவையில் மயங்கி அவரையே மணந்து அங்கேயே தங்கிவிட்டாராம். அந்நாளில் மல்லு எனும் அந்த மூதாட்டி செய்த பலகாரமே பலாக் கொட்டை அக்கல எனும் இனிப்பு பலகாரமாகும். அவரைத் தொடர்ந்து அவர் மகள் தயாவத்திக்கும் அவரைத் தொடர்ந்து அவர் பேத்தி சோமவத்திக்கும் இந்த கைப்பக்குவம் பரம்பரை பரம்பரையாக பரிமாறப்பட்டு வந்துள்ளது. பலாக்கொட்டையை வறுத்து இடித்து அதை அரிசிமாவுடன்; கலந்து கருப்பட்டியும் தேங்காய்ப்பூவும் சேர்த்து செய்யப்படும் ஹக்கல எனும் பலகாரத்தை பார்க்கும் போதே நாவூறும். அத்துடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நம் நாட்டுக்கே உரித்தான இதுபோன்ற பலகாரங்கள் இலங்கையில் புதைந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.