ஆயுர்வேத மருத்துவமும் நம் நாட்டு பண்டைய மருத்துவமும் ஒன்றென பலர் கருதினாலும் அவை இரண்டும் ஒன்றல்ல. பண்டைய மருத்துவத்தில் நம் மண்ணில் வளரும் மரம், செடி, கொடி, பூ, காய், கனி ஆகிய மூலிகைகள் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இலங்கையின் இறுதி மன்ன னான வீர பராக்கிரம நரேந்திரசிங்கவின் மனைவிக்கு ஏற்பட்ட தோல் வியாதியை குணப்படுத்திய பரம்பரையைச் சேர்ந்தவரான விமலா சிறிசேன எனும் மருத்துவர் இன்றும் அலவ்வை, வலகும்புர எனும் இடத்தில் நம் நாட்டு பண்டைய மருத்துவத்தால் மருத்துவம் செய்து பல்வேறு நோய் பிணிகளை நீக்கி வருகின்றார். இது இலங்கையில் புதைந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.