அங்கம்பொர அல்லது அங்கப்போர் என்றழைக்கப்படும் தற்காப்புக் கலையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைத் தீவில் தோன்றிய ஆதிக்கலையாக கருதப்படுகின்றது. இது பிரதான மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. நிராயுதபாணியாக கைகளினால் சண்டை செய்தல், ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டை செய்தல், எதிரிகளை விரட்டுவதற்கு மந்திரங்களைப் பயன்படுத்துதல் அவையாகும். இத்துடன் சுதேச மருத்துவ முறையொன்றையும் கற்றுக்கொள்வது கட்டாயமானது. அங்கப்போர் வீரர்களினால் ஆங்கிலேய படைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக இக்கலை அன்று தடை செய்யப்பட்டது. ஆனால் இன்று அரச அங்கீகாரத்துடன் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு கற்பிக்கப்பட்டு வருவது நமக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதுடன் இலங்கையில் புதைந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.
பிலிமத்தலாவவில் உள்ள கஹம்பே என்ற கிராமத்தில் அரசர் நான்காம் புவனேகபாகுவின் ஆட்சியில் இருந்து இன்று வரை ஒரு தலைமுறை மூக்கு கண்ணாடி தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். இந்த தலைமுறையினர் பளிங்கு படிகத்தால் கண்ணாடிகளை உருவாக்குகிறார்கள். அரச காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம் இன்றும் நடைமுறையில் உள்ளது. காணக்கிடைக்காத அரிய பொக்கிஷமாக விளங்கும் இது இலங்கையில் புதைந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.
கந்தேகம தொல்பொருள் வலயத்தில் அமைந்துள்ள தானிகல மலை இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். இதன் உச்சி வட்ட வடிவமான பரந்த வெளியைக் கொண்டுள்ளது. ஏலியன் மலை என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் வேற்றுகிரக வாசிகள் வந்து போவதாக நம்பப்படுகின்றது. ஏனெனில் இந்த இடத்திற்கு மேல் பறக்கும் தட்டுகளை அவதானித்துள்ளதாக இங்குள்ள கிராமவாசிகள் கூறுகின்றனர். இது இலங்கையில் புதைந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடியை இணைக்கும் இலங்கையின் மிக நீளமான இரும்புப் பாலமான கல்லடி பாலம் பாடும் மீன்களுக்கு பிரசித்திப்பெற்ற இடமாகும். இரவில் மீனவர்களுக்கு வழிகாட்ட மீன்கள் பாடிக்கொண்டே நீந்திச் செல்வதாக கதைகள் உண்டு. மேலும் இலக்கியங்களில் கூட நீர்மகளிர் இசைக்கும் இசை என வர்ணிக்கப்படுகின்றது. இது இலங்கையில் புதைந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவமும் நம் நாட்டு பண்டைய மருத்துவமும் ஒன்றென பலர் கருதினாலும் அவை இரண்டும் ஒன்றல்ல
உலகின் பல்வேறு பகுதிகளில் பொம்மலாட்டம் இருந்தாலும், முள் முருங்கை மரத்தால் ஆன அழகான பொம்மைகளுக்கு நூலைக்கட்டி ஆட்டுவிக்கும் பொம்மலாட்ட முறை இலங்கையில் பழங்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது.
கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னர், ரத்தல்கொட, அம்பலன் வத்தை எனும் கிராமத்தில், உண்டிய ராலா என்பவர்.